Tuesday, September 12, 2017

Paadum Nilavin Padaippu - பாடும் நிலாவின் படைப்பு (Nagesh)

Album – Nilavin Azhagu Nee  Lyrics: Nagesh           Music : Nagesh


பாடல்    : நிலவின் அழகு நீ... அழகின் நிஜமும் நீ...
வரிகள் : நாகேஷ் என்ற பாடும் நிலா
இசை     : நாகேஷ் என்ற பாடும் நிலா


பாடும் நிலா என்று அழைக்கப்படும் நமது சகோதரரின்(நாகேஷ்) இசையில், அவரின் வரிகளால் பிணயப்பட்ட ஒரு அற்புதமான பாடல் உங்கள் பார்வைக்கு. தமிழ் ஓசையின் வாழ்த்துகள்!

Composed, Written and produced by our beloved Paadum_Nila. Mr.Nagesh is an asset to Paltalk Thamizh rooms. His mesmerizing voice and dedicated singing makes you to listen while singing!
Bravo Bro.. Way to go!!  All the best!!


பாடல் வரிகள்:-

நிலவின் அழகு நீ...   அழகின் நிஜமும் நீ..
நிஜத்தின் நிழலும் நீ..   நிழலின் சுகமும் நீ..
சுகத்தின் சுகமும் நீ.. (2)
நிலவின் அழகு நீ...   அழகின் நிஜமும் நீ..

பின்னனி இசை 1.....
ரோஜாவின் இதழும் நீ.. இதழின்  சுவையும் நீ..
(இசை)
ரோஜாவின் இதழும் நீ.. இதழின்  சுவையும் நீ..
மலரின் மணமும் நீ.. மனதின் மயக்கம் நீ..
சோலையில் பூவும் நீ..(2)
நிலவின் அழகு நீ...            அழகின் நிஜமும் நீ..

பின்னனி இசை 2.....
தென்றலின் வருகை நீ.. மார்கழி பனியும் நீ..
(இசை)
கோடையின் வெயிலும் நீ.. சாரல் மழையும் நீ..
வாழ்வில் வசந்தம் நீ.. (2)

நிலவின் அழகு நீ...                   அழகின் நிஜமும் நீ..
நிஜத்தின் நிழலும் நீ..         நிழலின் சுகமும் நீ..
சுகத்தின் சுகமும் நீ.. (2)


பாடும் நிலாவின் பாடல்  இங்கே சொடுக்கவும்!!

தமிழ் ஓசையின் வாழ்த்துகள்!






Album – dhinusu dhinusaa  Lyrics: Nagesh           Music : Nagesh


பாடல்    : தினுஸூ தினுஸா
வரிகள் : நாகேஷ் என்ற பாடும் நிலா
இசை     : நாகேஷ் என்ற பாடும் நிலா (பாடுபவரும் இவரே)


பாடல் வரிகள்:- 


தினுஸு தினுஸா கனவுல கெறக்கம் பொறக்குதே எனக்கு
எடக்கு மடக்கா நெசம் வந்து நெனப்ப கெடுப்பதே பொழப்பு
தூக்கமெல்லாம் பல நாள் கணக்கா தொலைச்சே கெடைக்கேன்
ஏன் கிறுக்கக்கியே ஒன்ன ரஸிக்க மனம் அனலா கொதிக்க – தெனம் தெனம்

தினுஸு தினுஸா கனவுல கெறக்கம் பொறக்குதே எனக்கு
எடக்கு மடக்கா நெசம் வந்து நெனப்ப கெடுப்பதே பொழப்பு

பார்வையது துரு புடிக்க ஜன்னல் பக்கம் கெடந்தவளே (2)
ஜாடை சொல்லி நடப்பவளே மனசில் தடம் பதிச்சவளே (2)

நீயாக என் மனதில் தீய வச்சே – அத
ஓயாம நானும் இங்கு ஒன்ன ரசிக்க
தெனம் தெனம்..

தினுஸு தினுஸா கனவுல கெறக்கம் பொறக்குதே எனக்கு
எடக்கு மடக்கா நெசம் வந்து நெனப்ப கெடுப்பதே பொழப்பு
தூக்கமெல்லாம் பல நாள் கணக்கா தொலைச்சே கெடைக்கேன்
ஏன் கிறுக்கக்கியே ஒன்ன ரஸிக்க மனம் அனலா கொதிக்க – தெனம் தெனம்

தினுஸு தினுஸா கனவுல கெறக்கம் பொறக்குதே எனக்கு
எடக்கு மடக்கா நெசம் வந்து நெனப்ப கெடுப்பதே பொழப்பு

தாண்டி செல்ல நான் நெனச்சும் தடுத்து நிக்கும் ஓன் நெனப்பே (2)
ஏண்டி வெதச்சுபுட்ட நெதமும் அது என்ன கொழப்பா (2)

தேவதையா ஒன்ன நீயும் பாக்க வச்ச – எந்த
தேடலும் தேவை இல்ல ஒன்ன விட                            இப்படியே


தினுஸு தினுஸா கனவுல கெறக்கம் பொறக்குதே எனக்கு
எடக்கு மடக்கா நெசம் வந்து நெனப்ப கெடுப்பதே பொழப்பு
தூக்கமெல்லாம் பல நாள் கணக்கா தொலைச்சே கெடைக்கேன்
ஏன் கிறுக்கக்கியே ஒன்ன ரஸிக்க மனம் அனலா கொதிக்க – தெனம் தெனம்

தினுஸு தினுஸா கனவுல கெறக்கம் பொறக்குதே எனக்கு
எடக்கு மடக்கா நெசம் வந்து நெனப்ப கெடுப்பதே பொழப்பு

Paadum Nilaavin dhinusu dhinusaa இங்கே சொடுக்கவும்!!

தமிழ் ஓசையின் வாழ்த்துகள்!

No comments:

Post a Comment