Album – Nilavin Azhagu Nee Lyrics: Nagesh Music : Nagesh
பாடல் : நிலவின் அழகு நீ... அழகின் நிஜமும் நீ...
வரிகள் : நாகேஷ் என்ற பாடும் நிலா
இசை : நாகேஷ் என்ற பாடும் நிலா
பாடும் நிலா என்று அழைக்கப்படும் நமது சகோதரரின்(நாகேஷ்) இசையில், அவரின் வரிகளால் பிணயப்பட்ட ஒரு அற்புதமான பாடல் உங்கள் பார்வைக்கு. தமிழ் ஓசையின் வாழ்த்துகள்!
Composed, Written and produced by our beloved Paadum_Nila. Mr.Nagesh is an asset to Paltalk Thamizh rooms. His mesmerizing voice and dedicated singing makes you to listen while singing!
Bravo Bro.. Way to go!! All the best!!
பாடல் வரிகள்:-
நிலவின் அழகு நீ... அழகின் நிஜமும் நீ..
நிஜத்தின் நிழலும் நீ.. நிழலின் சுகமும் நீ..
சுகத்தின் சுகமும் நீ.. (2)
நிலவின் அழகு நீ... அழகின் நிஜமும் நீ..
பின்னனி இசை 1.....
ரோஜாவின் இதழும் நீ.. இதழின் சுவையும் நீ..
(இசை)
ரோஜாவின் இதழும் நீ.. இதழின் சுவையும் நீ..
மலரின் மணமும் நீ.. மனதின் மயக்கம் நீ..
சோலையில் பூவும் நீ..(2)
நிலவின் அழகு நீ... அழகின் நிஜமும் நீ..
பின்னனி இசை 2.....
தென்றலின் வருகை நீ.. மார்கழி பனியும் நீ..
(இசை)
கோடையின் வெயிலும் நீ.. சாரல் மழையும் நீ..
வாழ்வில் வசந்தம் நீ.. (2)
நிலவின் அழகு நீ... அழகின் நிஜமும் நீ..
நிஜத்தின் நிழலும் நீ.. நிழலின் சுகமும் நீ..
சுகத்தின் சுகமும் நீ.. (2)
தமிழ் ஓசையின் வாழ்த்துகள்!